செய்திகள்

தி கேரளா ஸ்டோரி ஓடிடி தேதி!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்சென் இயக்கத்தில் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் கேரளத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடு கடத்தப்படுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்தரித்து வெளியிடப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.பின், நாடு முழுவதும் இப்படம் காவல்துறை பாதுகாப்பில் வெளியிட்டப்பட்டது.

தொடர்ந்து, இப்படம் உலகளவில் ரூ.200 கோடி வரை வசூலித்தது. இந்நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற பிப்.16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT