செய்திகள்

விஸ்வரூபம் - சிறப்பு டீசரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

விஸ்வரூபம் திரைப்படம் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இஸ்லாமிய மதத்தை புண்படுத்தியதாக பெரிய பிரச்னைகளைச் சந்தித்ததுடன் அரசியல் ரீதியான சிக்கலையும் எதிர்கொண்டது. இதனால், மனமுடைந்த நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் தமிழகத்தில் வெளியாகவில்லை என்றால் நாட்டை விட்டு சென்றுவிடுவதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

பெரும் போராட்டத்திற்குப் 2013 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஆப்கானிஸ்தானில் நடப்பதுபோன்ற காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. தமிழில் உருவான சிறந்த தொழில்நுட்பப் படமாக விஸ்வரூபம் கருதப்படுகிறது. முக்கியமாக, பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்தை சிறப்பாகக் கையாண்டிந்தார் கமல்ஹாசன். 

இந்நிலையில், இப்படம் வெளியாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிறப்பு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT