செய்திகள்

நீலம் தயாரிப்பில் முதல்முறை: ஜே.பேபி படம் அப்டேட்! 

நடிகை ஊர்வசி நடித்துள்ள ஜே. பேபி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் பா. ரஞ்சித் நீலம் புரடக்‌ஷனை நடத்திவருகிறார். இதன் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் குண்டு, ரைட்டர், சேதுமான், பொம்மை நாயகி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. 

நீலம் தயாரிப்பின் சார்பாக சமீபத்தில் கிரிக்கெட்டினை மையப்படுத்தி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் நடிகை ஊர்வசி, நடிகர் தினேஷ் இணைந்து நடித்துள்ள ஜே. பேபி படம் விரைவில் வெளியாக உள்ளது. சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நீலம் தயாரித்த படங்களில் முதன்முறையாக எந்தக் காட்சிகளும் நீக்காமலும் மியூட் செய்யப்படாமலும் யு சர்ட்பிகேட்டுடன் வெளியாகவிருக்கிறது. 

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்று (பிப்.10) மாலை அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT