செய்திகள்

யாமி கௌதமின் கணவர் மிகவும் நேர்மையானவர்: கங்கனா ரணாவத் புகழாரம்!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஆர்டிகள் 370 படத்தினையும் யாமி கௌதமின் கணவரையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். 

DIN

ஹிமாச்சலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து நடித்துள்ள ஆர்டிகள் 370 திரைப்படம் பிப்.23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை தயாரித்துள்ளது யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2019இல் உரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தினை ஆதித்யா தார் இயக்கினார். அந்தப் படத்தில் யாமி கௌதம் நடித்தபோது அங்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்து 2021-இல் திருமணத்தில் முடிந்தது. 

நடிகை யாமி கௌதம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதால் மே மாதம் குழந்தை பிறக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆர்டிகள் 370 படம் பிரச்சார படமாக இருக்குமென பலரும் விமர்சித்தவேளையில் நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில், “ மிஸ்டர் தார் மிகவும் நேர்மையான மனிதர்; அதுமட்டுமில்லாமல் திறமையானவரும் ஆவார். யாமி கௌதமும் அற்புதமானவர். சந்தேகமின்றி அவர்கள்தான் எனது விருப்பமான பாலிவுட் ஜோடி. ஆர்டிகள் 370 டிரைலர் மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. படத்துக்கு வாழ்த்துகள். தாயாகப்போகும் யாமி கௌதமுக்கும் வாழ்த்துகள். அவர்களை நினைத்து நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

நடிகை கங்கனாவின் எமர்ஜென்ஸி திரைப்படம் ஜுன் 14ஆம் தேதி வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT