செய்திகள்

ஃபஹத் ஃபாசிலின் ‘கராத்தே சந்திரன்’

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாளத்திலும் தமிழிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன் அசாத்தியமான நடிப்பால் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, கேரள மாநில விருதுகள் என பல்வேறு படங்களுக்கு பல விருதுகளை குவித்துள்ளார். 

குறிப்பாக, இவர் நடிப்பில் வெளியான, ‘மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஜு’ ஆகிய படங்களில் தன் நடிப்புத் திறனால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழத்தினார். 

சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் மிரட்டியெடுத்து இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்தார்.

தற்போது, மீண்டும் நடிகர் வடிவேலுவுடன் மாரீசன் என்கிற படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் ராய் இயக்கத்தில், ‘கராத்தே சந்திரன்’ என்கிற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பவானா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT