முகப்பு
செய்திகள்

வேலு நாச்சியார் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

வேலு நாச்சியார் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

வேலு நாச்சியார் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

வீரமங்கை வேலு நாச்சியார் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி. 'கொரில்லா' போர்முறையை முதன்முதலாக சோதித்துப் பார்த்தவர். தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர். 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணி. 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வேலு நாச்சியார் வாழ்க்கை வரலாற்றினை படமாக்குகிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த ராஜ். 

டிரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பாக  தயாரிக்கும் இந்தப் படத்தில் வேலு நாச்சியாராக நடிக்கிறார் அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கவிருக்கிறார். மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்குமெனக் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆயிஷாவின் பிறந்தநாளில் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →