செய்திகள்

பர்த்மார்க் சாதாரண விஷயம் கிடையாது: இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

DIN

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ள பர்த்மார்க் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷபீர். ரஜினியின் ஜெயிலர் படத்தில் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்னா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘பர்த்மார்க்’.

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக் கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது. இதில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது:

'பர்த் மார்க்’ நிச்சயம் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும். நம் வாழ்விலும் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போதுதான் சுகப்பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விஷயத்தைக் கூறினார். அதைப் பற்றி படிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்தது. இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்ததால் படமாக எடுத்துள்ளோம். இந்தப் படத்தின் கதை 1990-களில் நடக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவ வீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர்பெற்ற இடம் அந்தக் கிராமம்.

அங்கு தம்பதிகள் சந்திக்கும் மனப்போராட்டங்கள், மாற்றங்களை த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இந்த கிராமத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளம் இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை அமைத்தோம். ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். ஷபீரும் கடுமையாக உழைக்கக் கூடியவர். வருகிற பிப்ரவரி 23 அன்று இந்தப் படம் வெளியாகிறது. படம் பார்த்து முடித்ததும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை இந்தக் கதை ஏற்படுத்தும். இதைத் தான் உணர்த்த விரும்பினோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT