செய்திகள்

10 கோடி பார்வைகளை கடந்த குண்டூர் காரம் படத்தின் பாடல்!

குண்டூர் காரம் படத்தின் குறிச்சி மடதாபெட்டி பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

DIN

குண்டூர் காரம் படத்தின் குறிச்சி மடதாபெட்டி பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் நாள் வெளியானது.  

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.  நடிகைகள் ஸ்ரீ லீலா,  மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.  படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 

குறிச்சி மடதாபெட்டி எனும் பாடல் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இதன் லிரிக்கல் விடியோ பாடல் 100 மில்லியனுக்கும் (10 கோடி) அதிகமான பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது. 

நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்நாளில் இவ்வளவு கஷ்டப்பட்டு நடனம் ஆடவில்லை எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT