செய்திகள்

லவ்வர் படம் பார்க்கும்போது சில நிமிடங்களுக்குப் பிறகு...: செல்வராகவன் கூறியது என்ன?

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' படக்குழுவுக்கு சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

DIN

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், “லவ்வர் திரைப்படம் பார்த்தேன். பிடித்திருந்தது. இந்தக் காலத்து காதலை சிறப்பாக காட்டியிருந்தார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். மிகவும் எதார்த்தமாக இருந்தது. மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா அருமையாக நடித்திருந்தார்கள்“ எனப் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன ஆகிய காதல் சார்ந்த திரைப்படங்கள் 90களில் பிறந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT