செய்திகள்

டாப் 10 இடங்களைப் பிடித்த தொடர்கள் எவை! இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் டாப் 10 இடங்களைப் பிடித்த தொடர்கள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை அதிக ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களுக்கு பிடித்த முதல் 10 தொடர்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

சன் டிவியின் சிங்கப் பெண்ணே தொடர் 11.10 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கயல் சீரியல் 10.83 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

வானத்தைப் போல தொடர் 10.43 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

எதிர் நீச்சல் சீரியல் 10.39 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது.

சுந்தரி சீரியல் 8.99 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 8.73 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

இனியா தொடர் 8.25 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்திற்கு 7.63 டிஆர்பி புள்ளிகள் கிடைத்து 8-வது இடத்தில் உள்ளது.

ஆனந்த ராகம் தொடர் 6.35 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. கார்த்திகை தீபம் தொடர் 5.88 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி புள்ளிகள் சென்ற வாரத்தைவிட இந்த வாரம் அதிகரித்து உள்ளது. எப்போதும்போல சன் டிவியின் சிங்கப் பெண்ணே தொடர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வழக்கம்போல முதல் 5 இடங்களை சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களேப் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT