முகப்பு
செய்திகள்

வணங்கான் டீசர்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 11:36 AM
பகிர்:

இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர். மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில் வணங்கான் படம் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த நிலையில் ஒருசில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →