செய்திகள்

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு!

ஒரு கிடாயின் கருணை மனு படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா படத்தில் யோகி பாபு நடிக்கிறார்.

DIN

டிஸ்னி+ ஹாஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார்.

முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘சத்திய சோதனை’ படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

ஆர்பி டாக்கிஸ் சார்பில் எஸ்.ஆர். ரமேஷ் பாபு, பாக்ஸ் ஆபிஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தப்படம் குறித்து நடிகர் யோகி பாபு, “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள். அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன். அந்த நல்வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பாகும். மேலும் வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் கதையம்சமுள்ள பல தரமான படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன். இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார்.

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா, "இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.  இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன்,  பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். மேலும் இப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்" என்றார்.

நடிகை லவ்லின் சந்திரசேகர், "இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அற்புதமான திரைக்கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நான் அழகான மற்றும் தைரியமான இளம் பெண்ணாக நடிக்கிறேன். ஒரு  மிகச்சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி" என்றார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்க, வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பி.எல். சுபேந்தர் கலை இயக்கம் செய்ய, படத்தொகுப்பை ஆர்.ராமர் கையாள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT