செய்திகள்

இனியா தொடர் படப்பிடிப்பு தளத்தில் விஷப் பாம்பு! வைரல் விடியோ!

இனியா தொடர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த விஷப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் செம்பா பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த ஆல்யா, பின்னர் இத்தொடரில் இருந்து விலகினார்.

ராஜா ராணி தொடரில் முதல் பாகத்தில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை ஆல்யா மானசா காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆல்யா மானசா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்துவருகிறார். நடிகர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இனியா தொடர் படப்பிடிப்பு தளத்தில் விஷப் பாம்பொன்று வந்துள்ளது. இதை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு புதிய நபர் ஒருவர் வந்துருக்கிறார்” என்று தெரிவித்து விடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT