பாலிவுட் படத்தில் ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த் பாலிவுட்டில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர், லால் சலாம் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அடுத்ததாக, ரஜினி - 171 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித் நந்திவாலா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் ரஜினியை சந்தித்த சஜித் நந்திவாலா இப்படத்தைக் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.