செய்திகள்

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

நடிகர் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

DIN

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் இளைஞரை ஜார்ஜ் குட்டியின்(மோகன்லால்) மகள் அடித்துக் கொல்கிறாள். இந்தக் கொலையை மறைக்க ஜார்ஜ் தன் குடும்பத்தினருடம் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்கள் என த்ரிஷ்யம் கதைகள் உருவாக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் அதன் இறுதி பாகமாக இருக்குமெனவும் சொல்லப்படுகிறது. 

2013-ல் வெளியான முதல் பாகத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். ஹிந்தி படத்தை பனோரமா ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது.

இந்த நிலையில், த்ரிஷ்யம் பாகங்களை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பனோரமா ஸ்டூடியோஸ் பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் 10 நாடுகளில் த்ரிஷ்யம் படங்களை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே, கொரியன் மொழியில் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யமுனை பாதுகாப்பு: மாணவா்களிடம் ஆலோசனை கோரிய பாஜக தலைவா்

ரூ.3 கோடி கையாடல்: கூட்டுறவு சங்கச் செயலா் கைது

பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண் பெண் தெய்வம் கண்டெடுப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து மகாராஷ்டிர வேளாண் அதிகாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை, பெங்களூரு அணிகள் முதலிடம்

SCROLL FOR NEXT