செய்திகள்

சின்னத்திரையில் அறிமுகமாகும் மயில்சாமியின் மகன்!

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார்.

DIN

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் சின்னத்திரையில் களமிறங்கி உள்ளார்.

யுவன் மயில்சாமி 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து, சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் யுவன் நடித்திருந்தார்.

தற்போது, பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டக்காரண்யம் என்ற படத்தில் யுவன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சின்னத்திரை தொடரில் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள தங்கமகள் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டு பொண்ணு தொடரில் நடித்த நடிகை அஸ்வினி நடிக்கிறார்.

தங்கமகன் தொடர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் அறிமுகமாகும் யுவன் மயில்சாமிக்கு ரசிகர்கள் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT