செய்திகள்

இந்தாண்டு எனக்கு திருமணம்: வைரலாகும் பிரேம்ஜியின் பதிவு

இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெறும் என்று பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெறும் என்று பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி புன்னகை பூவே படத்தில் அறிமுகமானாலும், சிம்புவின் வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே கவனம் பெற்றார்.

தொடர்ந்து சென்னை 28, மங்காத்தா, சந்தோஷ் சுப்பிரமணியம், சரோஜா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் சத்திய சோதனை.  ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார்.

சத்தியசோதனை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களை பெற்றது. இந்த நிலையில் பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, "இந்தாண்டு எனக்கு திருமணம்" எனப் பதிவிட்டுள்ளார். 

பிரேம்ஜி அமரனுக்கு 44 வயதாகும் நிலையில், அவரின் திருமணம் குறித்த பதிவு, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT