செய்திகள்

பிக் பாஸில் பணப் பெட்டியை எடுத்துச் சென்றது யார்?

பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகை விசித்ரா பணப்பெட்டியை  எடுத்துகொண்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் சீசன் 7-ல் நடிகை விசித்ரா பணப்பெட்டியை  எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன், 90 நாள்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து ஏழு சீசன்களாக தொகுத்து வழங்குகிறார்.

மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், விஷ்ணு, அர்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜய் ஆகிய 8 பேரை தவிர பிற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்கில் வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கம் போல் 14-வது வாரத்தில் வைக்கப்படும் பணப்பெட்டி  வைக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்தில் தொடங்கி படிப்படியாக தொகை உயர்த்தப்படும். உள்ளே இருக்கும் 8 போட்டியாளர்களில் யாராவது எடுக்க விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.

இந்த நிலையில், நடிகை விசித்ரா ரூ. 13 லட்சம் இருந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற போட்டியாளர்கள் ரூ.15 லட்சம் வரை உயரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் விசித்ரா எடுத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விசித்ரா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேரியதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ ஏதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT