முகப்பு
செய்திகள்

வெற்றிமாறன் கதை, துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:24 PM
பகிர்:

எதிர் நீச்சல் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் துரை செந்தில் குமார். பின்னர் இவர் இயக்கிய காக்கிச் சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பினையே பெற்றது. 

தற்போது நடிகர் சூரியுடன் இணைந்து புதிய படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நடிகர் சூரி  நடிப்பில் 'விடுதலை - பாகம் 2', 'கொட்டுக்காளி', ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. சமீபத்தில் இந்தப் படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நகைச்சுவை நாயகனாக இருந்த சூரியின் மறு அவதாரமாக தற்போது நாயகனாக கலக்கி வருகிறார். 

நடிகர் சமுத்திரக்கனி தனது எக்ஸ் பதிவில், “துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தம்பி சூரி கதைநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு. வெல்வோம்” எனக் கூறியுள்ளார். இதற்கு நடிகர் சூரி, “நீங்கள் எங்களுடன் இருந்தது எங்களுக்கு பெரும் பலம்... நன்றிங்க அண்ணே” எனப் பதிலளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →