முகப்பு
செய்திகள்

பீச்சில வாங்கின லவ்வர் பொம்மை: வெளியானது சிவகாா்த்திகேயனின் அயலான் பட டிரைலர்

சிவகாா்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 10:00 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:54 PM

சிவகாா்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. 

அயலான் அவரது 2வது படம். பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஜன.12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

Advertisement

இதனிடையே, படத்தின் டிரைலர் இன்று(ஜன.5) வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.