செய்திகள்

முடிவுக்கு வருகிறது அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்!

மகன் ஆசிரியர் வேலைக்குச் செல்வதாக  நினைத்துக்கொண்டிருக்கும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான களம்தான் திரைக்கதை. 

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது. 

படிப்பறிவு இல்லாததால் அவமானங்களை சந்தித்த பெண், படித்தவரை திருமணம் செய்வதைக் குறிக்கோளாக கொண்டு, வாத்தியார் என நினைத்து பள்ளியில் பியூனாக வேலை செய்பவரைத் திருமணம் செய்துகொள்கிறார்.

மகன் வாத்தியார் வேலைக்குச் செல்வதாக  நினைத்துக்கொண்டிருக்கும் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான களம்தான் திரைக்கதை. 

இந்தத் தொடர் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்கள் முன்னேற்றம், கல்வி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர் ஒளிபரப்பாவதால், இளம் தலைமுறையைச் சேர்ந்த பலரையும் இத்தொடர் கவர்ந்துள்ளது.

இத்தொடரில் கண்மணி மனோகரன், ராஜ ஸ்ரீ, அருண் பத்மநாபன் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மித்ரா அழகுவேல் எழுத ஜீவ ராஜன் இயக்குகிறார்.

அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாகவும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் இடம்பெறுகிறது. 

இதனிடையே இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் விரைவில் முடிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT