செய்திகள்

'ஈரமான ரோஜாவே' நாயகி ஸ்வாதியின் புதிய இணையத் தொடர்!

நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நடிக்க ஸ்வாதி ஒப்பந்தமாகியுள்ளார். 

DIN


ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாதி நடிப்பில் புதிய இணையத் தொடர் வெளியாகவுள்ளது. ஆராதனா எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய இணையத் தொடரின் முன்னோட்ட விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

குடும்ப சிக்கல்களிலிருந்து விலகி சுயமாக சவால்களை சந்திக்கும் பெண்ணாக நடித்துள்ள ஸ்வாதி, ஆராதனா பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2ஆம் பாகம் எடுக்கப்பட்டது.

ஈரமான ரோஜாவே-2 தொடரில் நடிகை ஸ்வாதி

இதில், நடிகை ஸ்வாதி முதன்மை பாத்திரத்தில் நடித்தார். நாயகன் தியவியம் ராஜகுமாரனுடனான காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஈரமான ரோஜாவே தொடரில் ஸ்வாதியின் நடிப்பிற்கு இரு முறை சின்னத்திரை விருதுகளும் கிடைத்தன.

ஈரமான ரோஜாவே -2 தொடர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சினிமா வாய்ப்புகளில் நடிகை ஸ்வாதி கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நடிக்க ஸ்வாதி ஒப்பந்தமாகியுள்ளார். 

நடிகை ஸ்வாதி 

இதற்கிடையே ஆராதனா என்ற இணையத் தொடரில் நடிகை ஸ்வாதி நடித்துள்ளார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உறவுச் சிக்கல்களின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு கஷ்டப்படுவதை விட, சுதந்திரமான விருப்பமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்ணின் பாத்திரத்தில் ஆராதனாவாக ஸ்வாதி நடித்துள்ளார். 

ஆராதனா - இணையத் தொடரில் நடிகை ஸ்வாதி

இந்தத் தொடருக்கான முன்னோட்ட விடியோ தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் ஆராதனா விடியோ இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT