முகப்பு
செய்திகள்

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் அறிவிப்பு!

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
பகிர்:

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெளியீடு தள்ளிப்போகியுள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர், சிவ கார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், லால் சலாம் திரைப்படம் ஜனவரி 26 வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷாலின் லால் சலாமுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல், விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். விஷ்ணு விஷாலே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளதாக விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →