செய்திகள்

பிக் பாஸில் மிட் வீக் எவிக்‌ஷனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி  வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது.

பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, வார இறுதி எவிக்‌ஷனில் விசித்ரா வெளியேறினார்.

இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதன்படி வினுஷா, அக்‌ஷயா, சரவணவிக்ரம், கூல் சுரேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி, விஜய்வர்மா ஆகியோர் உள்ளனர். இவர்களில் இருந்து மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேறிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT