செய்திகள்

விரைவில் தயாரிப்பு நிறுவனம்: கேப்டன் மில்லர் இயக்குநர் அதிரடி!

DIN

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “எனக்குப் பிடித்த படங்களை மட்டுமே இயக்கி வருகிறேன். சமரசங்கள் இருந்தாலும் கேப்டன் மில்லர் எனது படமே. நான் விரைவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை தொடங்கவிருக்கிறேன். சிறிய பட்ஜெட் படங்களை இயக்க இதை உபயோகித்துக் கொள்வேன். ஏற்கனவே சில கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். அடுத்தப் படமும் தனுஷ் அவர்களுடன் இயக்க உள்ளேன். இடையே இந்த சிறிய பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறினார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தனது ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

கோவை -மங்களூரு இடையே சிறப்பு ரயில்

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT