முகப்பு
செய்திகள்

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் எப்போது?

நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 10 ஜனவரி, 2024 at 6:56 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:51 PM

நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் 80-ஸ் பில்டப் என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

Advertisement

இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு, மகேஷ் மேத்தீவ் சண்டைப் பயிற்சி, அறிவு மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர். வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது

இதையும் படிக்க: ஆடு ஜீவிதம் போஸ்டர்!

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (ஜன. 11) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.