முகப்பு
செய்திகள்

திட்டமிட்டபடி வெளியாகும் அயலான்!

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
பகிர்:

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம். 

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

இப்படம், நாளை (ஜன.12) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அயலான் படத்திற்கான கடன் தொகையைத் திருப்பித் தராததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் நிலை இருந்தது. தற்போது, இப்பிரச்னை முடிந்ததாகத் தெரிகிறது. அதற்கான, அறிவிப்பாக தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டூடியோஸ் அயலான் நாளை உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →