செய்திகள்

கேப்டன் மில்லர் மேக்கிங்!

கேப்டன் மில்லர் படத்தின் மேக்கிங் விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

DIN

தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் நாளை (ஜன.12) திரையரங்குகளில் வெளியாகிறது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லரின் பயணம் என்கிற பெயரில் மேக்கிங் விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

முன்னதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில், “ பின்னணி இசையும் இசைக் கலப்பு (மிக்சிங்) பணியும் முடிந்தது. கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது. தனுஷுக்கான அறிமுக இசைக்குக் காத்திருங்கள்” எனப் பதிவிட்டது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடியின் உரை இந்தியாவின் தாா்மிக நிலையைக் குறைத்துவிட்டது: காங்கிரஸ் விமா்சனம்

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற பெண் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் அருகே இரு வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

SCROLL FOR NEXT