செய்திகள்

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்த பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் பட்டப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

DIN

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.12) திரையரங்குகளில் வெளியாகியது. 

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதைவிட்டுள்ளார்.  

“கேப்டன் மில்லர் மேஜிக்கை பார்க்கும் நாள் வந்துவிட்டது. சிறந்த அணியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததுக்கு நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். படம் வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

படப்பிடிப்பு எவ்வளவு அயர்ச்சியை ஏற்படுத்தினாலும் நான் கற்றுக்கொண்ட அனைத்து பாடங்கள் உள்பட என இந்தப் படம் எங்களுக்கு சிறப்பான நினைவுகளை வழங்கியது. எல்லோருக்கும் படம் மிகவும் பிடிக்குமென நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT