செய்திகள்

அமைச்சர் உதயநிதிக்கு பதிலளித்த நடிகர் தனுஷ்!

DIN

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜன.12) திரையரங்குகளில் வெளியாகியது. 

அமைச்சர் உதயநிதி கேப்டன் மில்லர் படத்தினை புகழ்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், திரு. ஷிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜிவி பிரகாஷ், பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன்  உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் அந்தப் பதிவுக்கு நடிகர் தனுஷ், “அன்பான சகோதாரர் உதயநிதிக்கு நன்றி. உங்களுக்குப் பிடித்த கலைப்படங்களை நீங்கள் பாராட்ட தவறியதே இல்லை. எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது கர்ணன் படத்தினை நீங்கள் பாராட்டிக் குவித்தீர்கள். இந்தப் பாராட்டு எனக்கும் கேப்டன் மில்லர் படக்குழுவுக்கும் மிகவும் பெரியது. அதே அளவுகு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT