செய்திகள்

அமிதாப் பச்சன் - சூர்யா - அக்‌ஷய் குமார்...!

நடிகர்கள் அமிதாப் பச்சன், சூர்யா, அக்‌ஷய் குமார் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் வைரலாகி வருகிறது.

DIN

இந்தியன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் லீக் (ஐஎஸ்பிஎல்) தொடரின் விளம்பரத்திற்கான சந்திப்பில் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

சென்னையின் அணியின் உரிமையாளரான சூர்யா இந்நிகழ்வில் கலந்துகொண்டு இத்தொடரை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் வருகிற மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும்  ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

மும்பை அணி உரிமத்தை அமிதாப் பச்சன், ஹைதராபாத் உரிமத்தை ராம் சரண், பெங்களூரு உரிமத்தை ஹிருத்திக் ரோஷன், ஜம்மு - காஷ்மீர் அணியின் உரிமத்தை அக்சய் குமார் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT