செய்திகள்

பிக்பாஸ் போட்டியில் வென்றார் அர்ச்சனா!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் - 7 தொடரின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்.

DIN

பிக்பாஸ் 7-வது சீசன் முடிந்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்போட்டியில்   கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை, விசித்ரா, மாயா, நிக்சன் உள்பட 23 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கினர். ஒரு மாதம் கழித்து அர்ச்சனா, தினேஷ், அன் பாரதி, கானா பாலா, பிராவோ ஆகிய 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழைந்தனர். இதனால், இந்த சீசன் பெரிதாகக் கவனிக்கப்பட்டது. 

இறுதிச்சுற்றில் அர்ச்சனா, மாயா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகியோர் போட்டியிட்டு வந்தனர். 

இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் மணிக்குக் கிடைத்தது. பெரிதும் கவனிக்கப்பட்ட மாயா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT