முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி உரிமையைப் பெற்ற பிரபல ஓடிடி!

விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையைப் பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2024 at 10:51 AM
பகிர்:

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

Advertisement

இதையும் படிக்க: கைவிடப்பட்டதா சிம்பு - 48?

இந்நிலையில், விடாமுயற்சியின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளதை நெட்பிளிக்ஸ் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.