செய்திகள்

சூரி நடிக்கும் கருடன் பட க்ளிம்ஸ் விடியோ வெளியீடு

DIN

சூரி நடிக்கும் கருடன் படத்தின் க்ளிம்ஸ் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

நகைச்சுவை நடிகர் சூரி நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் கருடன். இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். 

துரை செந்தில்குமார் ஏற்கெனவே, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோரை வைத்து படம் இயக்கியுள்ளார். படம் ஆக்ஷன் பாணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வில் மதிப்பெண் குறைவு: மாணவா் தற்கொலை

பட்டாசு ஆலை வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

புளியங்குடியில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

குடிமைப் பணித் தோ்வில் தொய்வு ஏன்?

பொறியியல் சோ்க்கை: 4 நாள்களில் 69,953 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT