முகப்பு
செய்திகள்

சலார் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சலார் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 19 ஜனவரி, 2024 at 11:42 AM
பகிர்:

சலார் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

சலார் திரைப்படம் கடந்த டிச. 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

Advertisement

இந்த நிலையில், சலார் திரைப்படம் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.