செய்திகள்

தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய சாய் பல்லவி!

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது.

DIN

சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த விழாவில், சாய் பல்லவி தனது குடும்பத்துடன் நடனமாடிய விடியோ வைரலாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரேமம் படத்தில் அவர் நடித்ததன் மூலம் தென்னிந்தியா  முழுவதும் கவனம் பெற்றார்.

தற்போது, சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

சாய் பல்லவியின் சகோதரியான நடிகை பூஜா கண்ணன் தமிழில் வெளியான சித்திரை செவ்வாணம் படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

முன்னதாக, பூஜா கண்ணன் அவரது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதில், வினீத் என்பவருடன் தனக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி, வினீத் - பூஜா நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு, தனது குடும்பத்துடன் நடனமாடி உள்ளார்.

சாய்பல்லவி நடனமாடிய விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT