முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் அவேஷம் டீசர்!

நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
பகிர்:

நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் இறுதியாக வெளியான மாமன்னன், தூமம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ரோமஞ்சம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘ஆவேஷம்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்சன் - நகைச்சுவைப் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஃபகத் ஃபாசில் மற்றும் அன்வர் ரஷித் இணைந்து தயாரித்து உள்ளனர். 

இதையும் படிக்க: வைரலாகும் அனுபமா!

ரோமஞ்சம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநரின் படமென்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

இதில், ரங்கா என்கிற ரௌடி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபகத் ஃபாசிலின் தோற்றம் ரசிக்க வைக்கிறது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →