செய்திகள்

10 லட்சத்துக்கும் அதிகமான ரீல்ஸ்: வைரலாகும் குண்டூர் காரம் பாடல்! 

DIN

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் நாள் வெளியானது.  

எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.  நடிகைகள் ஸ்ரீ லீலா,  மீனாக்‌ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 

மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.  படம் 10 நாளில் ரூ. 231 கோடி வசூலித்துள்ளது. 

இப்படத்தின் 3வது பாடலான குறிச்சி மடதாபெட்டி எனும் பாடல் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இதன் லிரிக்கல் விடியோ பாடல் 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது. 

இந்தப் பாடலுக்கு திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான பேர் ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர். 

படக்குழு இதனைப் பகிர்ந்து இணையத்தை ஆக்கிரமிக்கும் பாடலென பதிவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை

திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

மது போதையில் ரகளை: மின் ஊழியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT