செய்திகள்

நடிகர் விஜய்யின் கட்சி பெயர் இதுவா?

நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகள் தொடா்ந்து நடந்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்த நிகழ்வு அரசியலுக்கான அடித்தளமாய் கருதப்பட்டது. பின்னா் ஜூலை மாதம் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்களுடன் நடிகா் விஜய் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும், தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் நிவாரணப் பொருள்களையும் வழங்கினாா்.

சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகிகளுடன் விஜய் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டாா். இக்கூட்டத்தில் தமிழக மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

தேர்தல் அரசியலைச் சந்திக்க விரைவில் தன் கட்சியைப் பதிவு செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில், அக்கட்சிக்கு,  ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

மலைத்தேன்... அஞ்சு குரியன்!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

SCROLL FOR NEXT