சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: சைரன் முதல் பாடல்!
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘பரவுது’ பாடல் வெளியாகியுள்ளது. அறிவு எழுதிய இப்பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.