செய்திகள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி......: வைரலாகும் பாண்டியராஜன் மகனின் பதிவு!

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் பிரித்வி பதிவிட்டுள்ளார்.

DIN

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் பிரித்வி ராஜன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் படக்குழுவினர் கேக் வெட்டி  கொண்டாடினர்.

இப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனான பிரித்வி ராஜன் நடித்திருந்தார். 

இந்த நிலையில் , இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிரித்வி, படப்பிடிப்பு தளத்தில் தனது தந்தை பாண்டியராஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" என்ற திருக்குறளைப்  பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

டி20 தொடரை வென்றது இலங்கை!

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

SCROLL FOR NEXT