செய்திகள்

காலத்தால் அழியாத கலைஞன் நாகேஷ்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

மறைந்த நடிகர் நாகேஷின் நினைவுநாளில் நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

DIN

மறைந்த நடிகர் நாகேஷின் நினைவுநாளில் நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகள் கோலோச்சியவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ். அவருடைய முதல் படம் “மனமுள்ள மறுதாரம்” 1958இல் வெளியானது. இப்படத்தில், நகைச்சுவை நடிகர் “டணால்” தங்கவேலுவின் தங்கையைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளைப் பையனை தங்கவேலு வீட்டுக்குக் கூட்டிவரும் கல்யாணத் தரகராக புரோகிதர் வேஷத்தில் நடித்திருப்பார் நடிகர் நாகேஷ்.  

2008இல் தசாவதாரம் படத்தில் நாகேஷ் தனது கடைசிப்படத்தினை நடிகர் கமலுடன் நடித்திருந்தார். பல்வேறு மேடைகளில் நாகேஷ் குறித்து பேசியிருக்கிறார் நடிகர் கமல். 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT