செய்திகள்

சஞ்சய் லீலா பன்சாலியின் முதல் தொடர்! 

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. சரித்திர படங்கள் எடுப்பதிலும் காதல் படங்கள் எடுப்பதிலும் கவனம் பெறுகிறார். இறுதியாக இவர் இயக்கிய கங்குபாய் கதியவாடி திரைப்படத்துக்கு ஆலிய பட்டிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த ஒப்பனை, சிறந்த எடிட்டிங், சிறந்த வசனம், சிறந்த தழுவலுக்கான திரைக்கதை ஆகிய பிரிவுகளில் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சஞ்சய் லீலா பன்சாலி முதன்முதலாக இணையத் தொடரினை இயக்கியுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் இதன் முதல் பார்வை போஸ்டர் நாளை (பிப்.1) வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தத் தொடருக்கு ஹீரமண்டி எனப் பெயடிரப்பட்டுள்ளது. இதில் சோனாக்‌ஷி சின்கா, அதிதி ராய் ஹைதரி, மனிஷா கொய்ராலா, ஷர்மின் சேகல் உள்பட பலர் நடித்துள்ளனர். 

சஞ்சய் லீலா பன்சாலி நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் ஆகியோரை வைத்து ‘லவ் அண்ட் வார்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதை சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பன்சாலி புரடக்‌ஷன் தயாரித்துள்ள இந்தத் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT