செய்திகள்

பா. ரஞ்சித்தின் 'பாட்டல் ராதா': டீசர் வெளியானது!

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் 'பாட்டல் ராதா' டீசர்.

DIN

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் 'பாட்டல் ராதா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது.

பா. ரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், 'பாட்டல் ராதா' படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT