செய்திகள்

இன்னுமொரு வேலையில்லா பட்டதாரி! தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

DIN

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. கடைசியாக தயாரித்த விஜய்யின் மெர்சல் (2017) திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023இல் தயாரித்த வல்லவனுக்கும் வல்லவன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

2018இல் ஆருத்ரா படத்தினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய பட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஜூலை 12ஆம் நாள் இதன் போஸ்டர் வெளியாகுமென அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, “ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக அடுத்த படத்தினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜூலை 12 முதல் மற்றுமொரு வேலையில்லா பட்டதாரியை காணலாம். மிஸ்டரை அழைக்கவும்... ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் நடிக்கிறாரா அல்லது வேலையில்லா பட்டதாரி போன்ற படமா எனக் குறிப்பிடமால் பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். அவரது 50ஆவது படமான ராயன் ஜூலை 26ஆம் நாள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT