விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குநர் நாக் அஸ்வின். 
செய்திகள்

கல்கி 2898 ஏடி: முதல்பாதி மெதுவாக இருந்ததா? விமர்சனங்களுக்கு பதிலளித்த இயக்குநர்!

கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் விமரசனத்துக்கு இயக்குநர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார்.

DIN

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் கடந்த ஜூன் 27-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

உலகளவில் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் ரூ.900 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு நேற்று (ஜூலை 8) அறிவித்தது.

இந்த நிலையில், யூடியூப்பில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அதில் முதல்பகுதி மிகவும் மெதுவாக பயணித்ததாக விமர்சனம் எழுந்தன. இதற்கு இயக்குநர் நாக் அஸ்வின், “இது உலகம் முழுக்க இருக்கும் பொதுவான பார்வைதான். அது சரியானதும்கூட. 3 மணி நேர படத்தில் முதல் பாகத்தை பார்வையாளர்கள் அப்படி நினைத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

விமர்சனங்களை நேர்மறையாக ஏற்றுக்கொள்ளும் இயக்குநரின் பண்பினை பிரபாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

விரைவில் இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலை நெருங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898 ஏடி வசூல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT