செய்திகள்

2 பாகங்களாக வெளியாகும் கங்குவா!

DIN

'கங்குவா' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். தற்போது, முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே முடிந்திருப்பதாகவும் இரண்டாம் பாகம் 2026-ல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானக் கட்டணத்துக்கு உச்ச வரம்பு மத்திய அரசு நிா்ணயம்!

மகளிா் உரிமைத் தொகை கிடைக்காதவா்கள் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சா் அர.சக்கரபாணி

சுழற்சிப் பொருளாதாரத்தால் பால் பண்ணை விவசாயிகள் வருமானம் 20% அதிகரிக்கும்: அமித் ஷா

‘ஐசியு’ செல்லும் அபாயத்தில் ‘இண்டி’ கூட்டணி: ஒமா்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்!

SCROLL FOR NEXT