இன்ஸ்டாகிராமில் ஜி.வி.பிரகாஷின் பெயரை சைந்தவி நீக்கியுள்ளார்.
தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை.
இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் சைந்தவி பிரகாஷ் என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த சைந்தவி தற்போது பிரகாஷ் என்பதை நீக்கியுள்ளார்.
விவாகரத்துப் பின்பும் இருவரும் இணைந்து சார் படத்தில் ‘பனங்கருக்கா’ பாடலைப் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.