நடிகை ஜோதிகா, ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார்.  
செய்திகள்

அக்‌ஷய் குமாரின் ரசிகை - தயாரிப்பாளர்...! ஜோதிகாவின் நெகிழ்ச்சி!

நடிகை ஜோதிகா ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமாருடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்தியுள்ளார்.

DIN

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது தமிழ், மலையாளம், ஹிந்தியில் நடித்து வருகிறார்.

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் தி கோர் என்ற மலையாளத் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பினைப் பெற்றது.

தற்போது மாதவன், அஜய் தேவ்கன் உடன் ஜோதிகா நடிப்பில் ‘சைத்தான்’ படம் உருவாகியுள்ளது. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்காக சூர்யாவுக்கும் சுதா கொங்காராவுக்கும் தேசிய விருதுகளும் கிடைத்தது.

தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு ’சர்ஃபிரா (sarfira)’ எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இப்படம் இன்று (ஜூலை 12) வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் நடிகை ஜோதிகா, “மிகவும் தேவையான வெற்றி உங்களுக்கு. சிறப்பான வாழ்த்துகள் அக்‌ஷய்குமார். இதயம் தொடும் நடிப்பு.

ஒரு ரசிகையாக உங்களது புகைப்படத்தை எனது அறையில் மாட்டியிருக்கிறேன். அங்கிருந்து தற்போது உங்களது சிறப்பான 150ஆவது படத்தின் தயாரிப்பாளராக உயர்ந்துள்ளேன். எந்நாளும் நினைத்து மகிழக்கூடிய தருணம் இது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT