செய்திகள்

இந்தியன் -2 பிடிக்கவில்லையா? சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் விமர்சனம்!

இந்தியன் -2 திரைப்படம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த் கருத்து.

DIN

இந்தியன் -2 திரைப்படம் குறித்து சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திரைப்படம் தனக்கு கனெக்ட் ஆகவில்லை என்றும், அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் - சங்கர் கூட்டணியில் இந்தியன் -2 கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வெளியானது. பிரமாண்ட பொருள் செலவில் உருவான இப்படம் இன்று வரை (ஜூலை 15) ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பல்வேறு தரப்பினர் இந்தியன் -2 திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சிறகடிக்க ஆசை தொடரில் முத்து பாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் வெற்றி வசந்த், இந்தியன் -2 திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியன் -2 படம் பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள், மூன்றாம் பகுதிக்கு, இப்படத்தில் ஒரு லீட் வைத்துள்ளார்கள். மூன்றாவது பாகத்தை பார்த்தால் தான் இந்தியன் -2 படத்தின் கதை புரியும் என்று நினைக்கிறேன்.

வெற்றி வசந்த்

நாமே ஊழலில் இருக்கும் ஒரு சிஸ்டம் தான், வேலையாக வேண்டும் என்றால் ஐந்து ரூபாய் கூடுதலாக கொடுத்து வேலையை முடிக்கும் நபர்கள் தான் நாம். அப்படி இருக்கும்போது நம்மை குற்றம் சொல்லும் மாதிரி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. அந்த விஷயத்தில் எனக்கு இந்த படம் ஒட்டவில்லை.

இந்தியன் -2 திரைப்படம் காட்சியளவில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கதையாக பார்க்கும்போது மூன்றாம் பாகத்தை பார்த்தால் தான் இந்த படத்தின் கதை புரியும். இந்த படம் ஒரு ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் இருப்பதால் எனக்கு கதை புரியவில்லை.

இயக்குநர் சங்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இயக்குநர் சங்கர் சாரை பற்றி எல்லாம் விமர்சனம் செல்லும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. இப்படம் குறித்து எனக்கு என்ன தோன்றியதோ அதைத்தான் நான் கூறியுள்ளேன். சங்கர் பெரிய ஜாம்பவான் எனத் தெரிவித்தார்.

மேலும் ஏ.ஆர். ரகுமான், அனிருத் ரவிச்சந்திரன் இசை குறித்து பேசிய அவர், இரண்டையும் ஒப்பிடவே கூடாது. இரண்டும் வெவ்வேறு தலைமுறை. இந்தியன் படத்தின் போது அவர் பயன்படுத்திய இசைக்கருவிகள் வேறு, இப்போது இந்தியன் -2க்கு அனிருத் பயன்படுத்திய இசைக்கருவிகள் வேறு, இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்று வெற்றி வசந்த் குறிப்பிட்டார்.

இந்த விடியோவை சிறகடிக்க ஆசை தொடரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT